முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இன்று (திங்கட்கிழமை) மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.