மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ‘இந்தியா’ முழுவதும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையொட்டி நாட்டில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்று முன் தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவர் அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போதே சீரற்ற வானிலை காரணமாக குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் ரைசியுடன் பயணித்த மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்நாட்டரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.