தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், அப்பகுதிலுள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருவாய்துறை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தனுஷ்கோடிக்கு சென்று ஆய்வு செய்த பின்னர் காற்றின் வேகம் குறைவாக வீசினால் அப்பிரதேசத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் – ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாவிற்குச் செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில் சீரற்ற வானிலை காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் உருவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.