2023 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையின் ஊடாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர உயர்தரபரீட்சைக்கு மொத்தம் 3 லட்சத்து 46 ஆயிரத்து 976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 445 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65 ஆயிரத்து 531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.