ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
இதனுடன், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் தமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரான்ஸும் (french) அறிவித்துள்ளது.
அதன்படி, தகுந்த நேரத்தில், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க தான் தயாராக இருப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் (Emmanuel Macron), தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.
பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என தான் கருதுவதாகவும், உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை தான் உடனடியாக எடுப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் பிராஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்பெயின்(spain) பிரதமர் பெட்ரோ சான்செஸ்(Pedro Sánchez), இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எனவும், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை, பாலஸ்தீனத்துக்கு உள்ளதாக நேர்வே (norway) பிரதமர் ஜோனாஸ் காரும் (Jonas Gahr Støre) தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அயர்லாந்தின் இந்த முடிவு நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பது பற்றியது எனவும், காசாவில் நாம் காணும் மனிதாபிமான பேரழிவை நிறுத்துமாறு மீண்டும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கேட்டுக்கொள்வதாகவும் அயர்லாந்து (ireland) பிரதமர் சைமன் ஹாரிஸ் (Simon Harris) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு 2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதனைதொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காசா நகர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இன்று வரை காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 36,000 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமையும், 81,026 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,139 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.