வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 25,26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா கல்லூரி உள்ளரங்கில் குறித்த போட்டி நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டமானது 5 தங்கப் பதக்கங்களையும் 1 வெள்ளிப் பதக்கத்தையும், 3 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதோடு, வவுனியா மாவட்டம் 3 வெள்ளிப் பதக்கங்களையும், 2வெண்கலப்பதக்கங்களையும் கிளிநொச்சி மாவட்டம் ஒரு வெண்கலப்பதக்கங்களையும் பெற்றிருந்தது.
குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக உடையார்கட்டு, இரணைப்பாலை புதுக்குடியிருப்பு , செல்வபுரம், உண்ணாப்பிலவு, கரைச்சிக்குடியிருப்பு, உடுப்புக்குளம், அளம்வில்,, தண்டுவான், பழம்பாசி கற்சிலைமடு கரிப்பட்டமுறிப்பு , மாங்குளம், பாண்டியன்குளம், கரும்புள்ளியான் போன்ற கிராமங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.