விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை மானியமாக 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதுடம் மானியம் வழங்கப்பட்ட நெல் அளவு 167,362 ஹெக்டேர் ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இவ்வருடம் சுமார் 450,000 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பயிரிடப்படும் அனைத்து நெற்பயிர்களுக்கும் சுமார் 7.5 பில்லியன் ரூபா நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது
மேலும் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் 2024 ஆம் ஆண்டு நெற்செய்கை மேற்கொள்ளும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேயருக்கு 15,000 ரூபா வீதம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்ததுடன் அதற்கு அமைச்சர்கள் குழுவின் அனுமதியும் கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.