யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸாரால் 250 லீற்றர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அச்சுவேலி பொலிஸார் குறித்த பகுதியை நேற்று முற்றுகையிட்டனர்.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் அடுப்பு, எரிவாயு சிலிண்டர், கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.