சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலி ஹம்பாந்தோட்டை களுத்துறை கண்டி கேகாலை மாத்தறை நுவரெலியா இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஒகேவெல கடுவான பிரதேச செயலக பகுதிகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த தொடாங்கொட ஆகிய பிரதேச செயலக பகுதிகளுக்கும் முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மேலும் கண்டி மாவட்டத்தின் கங்கவட்ட கோரலை உடுநுவர யட்டிநுவர இஹலகோரலை பஸ்பாகே கோரலை ஆகிய பிரதேச செயலக பகுதிகளுக்கும் முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தி;ன் அரநாயக்க ருவன்வெல்ல மாவனெல்லை புளத்கொகுபிட்டிய ரம்புக்கனை கேகாலை யட்டியாந்தோட்டை வரக்காபொல கலிகமுவ ஆகிய பிரதேச செயலக பகுதிகளுக்கும் முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதி மற்றும் ரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபொல மற்றும் கொலன்ன பிரதேச செயலக பகுதிகளுக்கும் இவ்வாறு முற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக 10 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
மேலும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விமானப் படையின் இரண்டு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.