பல்லேவெல மற்றும் கனேகொட புகையிரத நிலையங்களுக்கும் வயங்கொட மற்றும் கம்பஹா புகையிரத நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான பாதையில் முன்னெடுக்கப்படும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பிரதான வீதி, கரையோர வீதி மற்றும் புத்தளம் வீதிகள் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் களனிவெளி பாதையில் இயங்கும் புகையிரத சேவை வாகா புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.