இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகுமூலம் பயணித்த இலங்கையர்கள் ஐவர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும் இன்று காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் தாழ்வுபாடு,தலைமன்னார்,வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 முதல் 39 வயதுக்குட்பட்ட ஐந்து நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும் இலங்கையில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.