கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
திருவிழாத் திருப்பலி ஆராதனைகள் தமிழ் – சிங்கள மொழிகளில் நடைபெற்று வருகின்றன.
திருப்பலி ஆராதனைகள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.