நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து குற்றச்செயல்கள் 23 வீதம் குறைவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதமாக குறையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, ஆறு மாதங்களுக்குள் விசேட நடவடிக்கையின் மூலம் 5,000 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் வலையமைப்பில் 90 வீததத்திற்கும் அதிகமானவற்றை அழித்துவிட்டதாகவும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.