கொழும்பு -பேலியகொடை, களனி கங்கை அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பேலியகொட பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.