ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் தமிழ்த் தேசிய கட்சிகள் பொது வேட்பாளர் என்ற கருத்தியலில் இருந்து பின்வாங்க ஆரம்பித்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக சங்கானை மற்றும் கொடிகாமம் ஆகிய பிரதேசங்களில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்சியாக தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற கருத்தியலுக்கு அமைய ஆதரவுக் கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 14ஆம் திகதி கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று சங்காணை கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டியதன் அவசியம் பற்றி தொடர்சியாக கலந்துரையாடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.