இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்யப் பயணம் ஜூலை மாதம் நடைபெறலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற உள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரஷ்ய அரசாங்கம் தயார் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இந்த ஆண்டு மே மாதம் ரஷ்ய ஜானாதிபதி புடின் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பதவியேற்றார், அதே நேரத்தில் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றிருந்தார்
மேலும் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்திய விஜயத்தின் போது வருடாந்திர இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டை நடத்த இருநாடுகளும் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.