எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளையின் பிரகாரம் விசேட நாடாளுமன்ற அமா்விற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2024, ஜுலை 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த அமா்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் பங்குபற்ற வேண்டுமென சபாநாயகர் அறிவித்துள்ளாா்.
இதேவேளை, பிரதமர் தினேஸ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த விசேட ஒருநாள் அமர்வு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.