மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகியது.
நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.
ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். பிரதமர் மோடி முன்மொழிந்த தீர்மானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வழிமொழிந்தார்.
மற்றொரு தீர்மானத்தை ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாரலன் சிங் முன்மொழிய ராஜ்குமார் சங்வான் வழிமொழிந்தார்.
3-வது தீர்மானத்தை மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி முன்மொழிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வழிமொழிந்தார். ஷிண்டே சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரதாப் ராஜ் ஜாதவ் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோகன் நாயுடு தீர்மானத்தை முன்மொழிய, பிரதமர் கொண்டுவந்த தீர்மானத்தை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.
இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷை சபாநாயகராக தேர்வு செய்யக்கோரி தீர்மானம் முன்மொழியப்பட்டது. சுப்ரியாவின் தீர்மானத்தை திமுக எம்.பி. கனிமொழி வழிமொழிந்தார். இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷை ஆதரித்து மொத்தம் 3 தீர்மானம் வழிமொழியப்பட்டது.
ஆளும் கட்சியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை ஆதரித்து மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் தீர்மானம் வழிமொழிந்தார்.
இதையடுத்து மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம்பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.