ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
பரிஸ் கிளப் உட்பட சீனாவுடன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும் எனவும் அதன் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டதாக அறிவிக்கப்படவுள்ளது.
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் இதனூடாக மக்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.