ஆசிரியர் – அதிபர் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், போராட்டம் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியும் தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இன்று (புதன்கிழமை) நடைபெறுகின்ற போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஜோசப் ஸ்டார்லின், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க உள்ளிட்ட உறுப்பினா்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செரமிக் சந்தியிலிருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரையான வீதியையும், என்.எஸ்.ஏ சுற்றுவட்டத்திலிருந்து சாரணர் மாவத்தை வரையான கல்லுப்பார வரையிலான வீதியையும் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை வீதிகளை தடை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.