உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லக்னோ – ஆக்ரா நெடுஞ்சாலையில், பீகாரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்துடன், லொறி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.