நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டுமுதல் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்
இதனூடாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் கட்டணக் கொள்கை மற்றும் விலைசூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட நீர் கட்டண சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.