சீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர்.
சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹுனான் மாகாணத்தின் யூலின் கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
இந்நிலையில் சம்பவ இடத்தில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்டோரை மீட்புப் படையினர் மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் தரைமட்டமான வீடுகளுக்குள் சிக்கி இருந்த 18 பேரில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.