இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க விராட் கோலிக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.
அதன்படி இன்றையப் போட்டியில் 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் அவர் இந்த சாதனையை நிகழ்த்த முடியும். எனினும் கடந்த இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி பிரகாசிக்க தவறியிருந்தார்.
இதேவேளை சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 18,426 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார 14,234 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.