மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியத் தலைநகரான டெல்லியை வந்தடைந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்மிற்கு பிரதமர் மோடியினால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடிக்கும், மலேசியா பிரதமர் அன்வரும் இடையில் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது உணவு பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயற்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














