மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது ‘வாழை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலை சென்னையில் நடைபெற்ற வாழை படத்தின் Pre Release நிகழ்ச்சியில் வீடியோ மூலம் இயக்குநர் மணிரத்தனம் பேசியுள்ளார்.
மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர். தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார். மத்த படம் மாதிரி எல்லா துறையில் உள்ளவர்களும் இந்த படத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். உங்களை நினைத்து எனக்கு பெருமையா இருக்கின்றது. இதில் எப்படி கிராம கதையில் இத்தனை பேரையும், இவ்வளோ நல்லா நடிக்க வச்சாருக்காரு தெரியல எனக்கு பொறாமையா இருக்கு. இதில் எல்லா கதாபாத்திரமும் அருமையா பண்ணிருக்காங்க, இது ஒரு தனி திறமை. இந்த படத்திற்கு என்னோட வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
`பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில்’கர்ணன்’ மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.