ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இம்ரான் கான், ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம் மற்றும் தத்துவவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த கிறிஸ் பாட்டன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதையடுத்து அப்பதவிக்கு போட்டியிட இம்ரான் கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இம்ரான் கான், ஏற்கனவே பிரித்தானியாவின் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தராக 2005 ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.