ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல் வழியாக நகர்வதாகவும், அது இவ்வார இறுதியில் மிகவும் வலுவான புயலாக உருவாகலாம் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கியூஷு மற்றும் அமாமி ஆகிய பகுதிகளில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது