இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய ஒடிசாவின் பிபிலி பகுதியில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் விதமாகக் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளை அழிக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது சுமார் 11,700 கோழிகள் கொல்லப்பட்டதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.