தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட்ட சுமார் 29 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான, 58 கிலோகிராம் நிறை கொண்ட சாரஸ் போதைப் பொருளை கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் குறித்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் முதற் கட்ட விசாரணையில் கஞ்சாவை உருக்கி ஒரு கிலோ சாரஸ் போதைப் பொருள் உருவாக்கப்படுவதாகவும், அண்மைக்காலமாக தூத்துக்குடியில் இருந்து போதைப் பொருட்கள் இலங்கைக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.