90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
செப்டம்பர் 18 ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25 ஆம் திகதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், ஒக்டோபர் முதலாம் திகதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவிருக்கின்றது.
முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவர் இன்று இரண்டு இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று உரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் இருந்து வரும் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் விகார் ரசூல் வாணிக்காக பிரசாரம் மேற்கொள்கிறார். விகார் ரசூல் வாணி பனிஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டூரு பகுதிக்குச் சென்று, காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் மந்திரி குலாம் அகமது மிர்-ஐ ஆதரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
பின்னர் ஸ்ரீநகரில் இருந்து மாலை டெல்லி திரும்புகிறார். இந்த தகவலை ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தலைவர் தரீக் ஹமித் கர்ரா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.