நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண உறவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ஜெயம் ரவியும் – ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.
இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகின்றது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள்இ பத்திரிக்கைஇ ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.