சீனாவில் குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டு தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி ஷாங்காய் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சினோபார்ம் வாயிலாக நிர்வகிக்கப்படும் தடுப்பூசி குரங்கம்மையை குணப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது என்றும் இந்த தடுப்பூசியை சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேவேளை குரங்கம்மையைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சில தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது