சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று, 350 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 350 பேருக்கு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் விசேட பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
அதன்படி, சிறு குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 350 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைதிகள் தினத்தை முன்னிட்டு, கைதிகளுக்குப் பார்வையாளர்களைத் திறந்த வெளியில் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.