2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,406 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பதிவாகியுள்ளன.
தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு மையத்துக்கு 1,199 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல்கள் முறைப்பாட்டு மையத்துக்கு 2,207 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இவற்றில் 3,305 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பதிவானவை ஆகும்.