”சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ஒற்றுமை விளையாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” விளையாட்டு துறையில் சாதனைபடைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
எமது நாட்டில் கிராமட்டங்களில் மற்றும் நகர மட்டங்களில் விளையாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
அதுமட்டுமல்லாது எமது நாட்டில் விளையாட்டுத்தறையில் பிரகாசிக்கும் இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளில் சென்று போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவர்களிடம் நிதியில்லை. அரசாங்கம் அதற்கான முறையான திட்டம் ஒன்றை வகுக்கவில்லை.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் திறமை வாய்ந்த பலர் உள்ளார்கள். அவரது ஆட்சியில் நாட்டின் விளையாட்டுத்துறை மாத்திரமல்லாது அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்” இவ்வாறு தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.