ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தங்களது விஜயத்தின் நோக்கம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய அவர்கள்,அமைதியான தேர்தலுக்கான பின்னணியை ஏற்படுத்தியமைக்காக ஜனாதிபதிக்கு தமது பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.