இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 299.94 ரூபாவாகவும், 309.23 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 299. 20 ரூபாவாகவும்இ 308.57 ரூபாவாகவும் காணப்பட்டது.
மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.