ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அணைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அதேவேளை, பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களும் தங்களது பார்வையை செலுத்தி வருகின்றனர்.
இதேவேளை காலை 8 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 10% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளதுடன் மாவட்டத்தில் ஒரு சீரான காலநிலை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்