ஜனாதிபதி தேர்தலானது நாட்டில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுயாதீன வேட்பாளர் ஜனாபதிபதி ரணில்விக்ரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்தார்.
இது குறித்து ஜனாபதிபதி ரணில்விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது” எனக்கு வாக்களித்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மக்கள் வரிசை யுகத்தினை ஏற்படுத்தினேன். அதாவது மக்கள் தங்கள் எதிர்காலத்தினை தீர்மானிப்பதற்கான வரிசையை ஏற்படுத்தினேன்.
நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுத்திருக்காவிடின் இன்றைய நாளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. சுமூகமான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது.
நாட்டு மக்களிடம் நான் ஒரு விடயத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் அமைதியாக செயற்பட வேண்டும். நாட்டில் புதிய கட்ட பயணத்தினை ஆரம்பிப்போம். தேர்தலில் முன்னிலையாகிய வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன்று இடம்பெற்ற தேர்தல் இலங்கைக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தவல்லது.நாட்டின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் தேர்தலாகவே இது அமையப்பெறும்” இவ்வாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.