ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 4 லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது
இது குறித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில் ” தேர்தல் வாக்குப்பதிவு சுமூகமான முறையில் இடம்பெற்றது.
பெரிதளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.பொலன்னறுவை மற்றும் மெதிரிகிரிய ஆகிய பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.வாக்காளர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.நூற்றுக்கு 18 சதவீதமான அளவில் சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றம் ஊடாக இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸார் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்ரக எடுக்கப்படும் குறிப்பாக 4 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.