இந்திய மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள 145 இந்திய மீனவர்களையும், 191 படகுகளை யும்விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவொன்றை கையளித்துள்ளதாகவும் மீனவர் பிரச்சினைக்கு வெளியுறவு அமைச்சர் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கச்சத் தீவை திமுக தாரை வார்த்து கொடுத்ததாக மீண்டும் மிண்டும் தவறான தகவலை பரப்ப வேண்டாமெனவும் செந்தில் பாலாஜி சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு வழக்கில் இருந்து விடுதலை பெறுவார் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.