நெற்செய்கையாளர்களுக்கு உயர் பருவத்தில் 25,000 ரூபா கொடுப்பனவும், மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் போது இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களின் பாதகத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் உரிய பொதுக் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
ஆணைக்குழு நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.