மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.
மேலும் இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.