நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் ஹங்வெல்ல பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல பகுதியில் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து, நாட்டில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் சீனாவைச் சேர்ந்த 29ஆண்களும் ஒரு பெண்ணும், இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்களும் ஒரு ஆணும், தாய்லாந்தைச் சேர்ந்த 2 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 499 கையடக்க தொலைபேசிகளும், 25 மடிக்கணணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவை தற்போது தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாகவே இவர்கள் நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை எவ்வளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.