உர மானியமாக நெல் விவசாயிகளுக்கு 25,000 ரூபாவை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இங்கு இது தொடர்பில் மேலும் பேசிய அமைச்சர்,
பெரும்போகம் தொடங்கப் போகிறது. இந்த உர மானியத்தை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்க உள்ளோம்.
அதன் பின்னர் பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு உரிய மானியத்தை வழங்குவோம் என்றார்.