எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட இ.தொ.கா முடிவு செய்துள்ளது.
அதன்படி இம்முறை இடம்பெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின், நுவரெலியா மாவட்டத்தில் நான் உட்பட தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் போட்டியிடவுள்ளோம் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்று, 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கௌரவ அநுரகுமார திஸாநாயக்க தெரிவாகியிருந்தார்.
இதன் பின்னர் ஜனாதிபதி தனது அரசியல் அமைப்பின் அதிகாரத்திற்கு அமைவாக கடந்த மாதம் 24ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கான தீர்மானம் எடுத்திருந்தார்.
எனவே தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, மலையகத்தின் மாபெரும் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த கூட்டனியில் மற்றும் எந்த சின்னத்தில், எத்தனை வேட்பாளர்களுடன் போட்டியிடவுள்ளனர் என பரவலாலும் பல்வேறு தரப்பினரால் கருத்தாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.