லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சலுகை காலம் 2024 ஒக்டோபர் 08 முதல் 2025 ஜனவரி 08 வரை 03 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லெபனானின் தற்போதைய போர் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, லெபனானுக்கு வந்த பின்னர் அதே பதிவை புதுப்பிக்காமல் நீண்ட காலமாக பணியில் இருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தூதரகத்திற்கு வந்து பதிவுகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் அறிவித்துள்ளது.