அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ‘1997’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் இது தொடர்பில் முறையிடலாம்.
இந்த துரித இலக்கம் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும்.
மேலும் தகவல் அளிப்பவர்களின் அடையாளங்கள் இரகசியமாக பேணப்படும்.
எவ்வாறாயினும், தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, சரியான தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அரசினால் பல்வேறு உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் குறிப்பிட்ட இடங்களில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது சில இடங்களில் நிறுத்தி பாழடைந்து விடப்பட்டிருந்தாலோ அது தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.