நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 233 என்று கூறப்படுகிறது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான மழைவீழ்ச்சி இன்மையால் அத்தனகலுஓயா மற்றும் களனி, கிங், நில்வலா மற்றும் களு ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.